Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

Share this:

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற நெடுநாளையக் கோரிக்கையை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இன்று மதுரை திருமங்கலத்தில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்றார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் கனவான மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இத் தீர்மானத்தில்,

  • இந்தியாவின் இரண்டாம் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

  • மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது  தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

  • குஜராத்தில் அருகருகே இருந்தாலும் காந்திநகரில் பாதியும், அகமதாபாத்தில் பாதியும் என அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.

  • மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை, சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது.

  • விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது.

  • 150 கி.மீ தூரத்தில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது.

  • தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என முன்னேற்றம் பெறுவதற்கு இரண்டாம் தலைநகர் இந்த காலத்தில் அவசியம் ஆகிறது.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M