Newskadai.com
அரசியல்

பரபரப்பில் தமிழக அரசியல் : அமித்ஷா வருகைக்கு முன்னர் அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!!!

Share this:

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சனிக்கிழமை பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தருகிறார். எதிர்வரும் தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில், மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

executive meetingமேலும் படிக்க : இன்று சொத்துக்கள் வாங்கும் யோகமான நாள்…யாருடனும் வம்பு வழக்குகள் வேண்டாம்…

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா வருகைக்கு ஒருநாள் முன்னர் அதிமுக முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தவிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

டிச.6ல் “வேல் யாத்திரை”… தமிழகத்திலும் மத, ரத அரசியலை தொடங்கும் பாஜக?… பின்னணி என்ன?

NEWSKADAI

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு… கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு…!

AMARA

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு வரப்போகும் விஜய்!? சத்தமே இல்லாம நடக்கும் ரகசிய ஆலோசனை…

NEWSKADAI