Newskadai.com
அரசியல்

“இந்தி திணிப்பிற்கு இடமில்லை, நீட் தேர்வு தேவையில்லை”… அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!

Share this:

முதல்வர் வேட்பாளர் யார், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு, சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு முடிவு காணப்பட உள்ளதால் முதன் முறையாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் உட்பட யாருமே செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. தற்போது அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும்

2.கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

3.அதிமுக அரசு மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறது. இருமொழிக் கொள்கையே அதிமுகவின் கொள்கை.

4. ஏழை மாணவர்களுக்கு எதிராகவும், கல்வியை வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும்.

5. ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

6. கலாச்சார ஆய்வுக்குழுவில். தமிழக அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

7. கச்சத்தீவு மீட்பு

8.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்

9.நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கபட நாடகம் ஆடும் திமுகவிற்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

10. கொரோனா வைரஸை விரட்டுவதில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு மற்றும் நன்றி.

11. மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு.

12. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு மற்றும் நன்றி.

13. நீட் தேர்வு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக பேசிவரும் திமுகவுக்கு கண்டனம்.


Share this:

Related posts

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் தேதி இதுதான்… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்…!!

AMARA

அடுத்த முதல்வர் யார்? அக்.7ல் அறிவிக்க போகும் அதிமுக தலைமை..!!

THAVAMANI NATARAJAN

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு : அரசுக்கு எல்.முருகன் வைத்த அதிரடி கோரிக்கை…!

MANIMARAN M