Newskadai.com
அரசியல்

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

Share this:

2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி அதனை முடிவு செய்வோம் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரம் என வெளிப்படையாக அறிவித்ததால் பிரச்சனை பூதாகரமாக ஆரம்பித்தது. அதுகுறித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார், மாஃபா. பாண்டியராஜன், கடம்பூர் ராஜு ஆகியோர் விதவிதமாக கருத்து கூறி வருகின்றனர்.

ADMK

சமீபத்தில் நடந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமியை முன்னிருத்தியே தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது தான் நல்லது என்றும், அதை ஓபிஎஸுக்கு எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியது. அதில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து இன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை முடித்த பின்னர், தலைமைச் செயலகத்தில்
சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, காமராஜ், விஜயபாஸ்கர் ஆகிய 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் அங்கிருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்ற 10 அமைச்சர்களும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி வரை அங்கு ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர். தற்போது அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், இனி அனைத்து நிலை கழக பொறுப்பாளர்களும் எந்தவித முன்யோசனையும் இன்றி கழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில், பத்திரிகைகளிலும் தங்களின் தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை.

உரிய நேரத்தில் தொண்டர்கள், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சித்தலைமை உரிய நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கும். ஜெயலலிதா இருந்தபோது, இருந்த ராணுவக் கட்டுப்பாடு போன்று இனிவரும் காலங்களில் கட்சியில் ராணுவக் கட்டுப்பாடு இருக்கும். சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம். கட்சியினர் மக்கள் பணியிலும், களப்பணியில் மட்டுமே செயல்படுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

AFRIN

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

AMARA

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

காங்கிரஸ்க்கு அடிமேல் அடிகொடுக்கும் பஞ்சாப்.. ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து :

NEWSKADAI

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M