Newskadai.com
அரசியல்

அடுத்த முதல்வர் யார்? அக்.7ல் அறிவிக்க போகும் அதிமுக தலைமை..!!

Share this:

தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கட்சி வேலைகளை செய்து வருகின்றனர், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை உறுதிபடுத்த முடியாமல் தினறும் நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ADMK

 

செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுகல் சீனிவாசன் ஆகியோர் கேட்டனர். சில அமைச்சர்கள் தற்போதுள்ள சூழலே தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர், அதன்பின் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கட்சியில் ஏற்கனவே முடிவெடுத்தபடி வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின்பு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை உறுதி செய்யலாம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

 

ஐந்து மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வரும் அக்டோபர் 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.


Share this:

Related posts

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

எப்படியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்… தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

உங்க ஆட்சிக்கு முடிவுக்கு வந்தால் தான் விவசாயிகளுக்கு விடிவு… எரிமலையாய் கொந்தளித்த ஸ்டாலின்…!

AMARA

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

MANIMARAN M

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI