Newskadai.com
விளையாட்டு

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

Share this:

வரும் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL போட்டிகள் துவங்கவுள்ளன. முதல் நாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதனையொட்டி இப்போடிகளில் விளையாட கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அமீரகம் சென்றடைந்தனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கேப்டன் தோனி தலைமையில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹருக்கும் நோய்த் தொற்று உறுதியானது. அந்த இக்கட்டான சூழலில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரரும் அதன் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். இவரைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதுப் போன்ற பல சிக்கல்களினால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கம் தெரிவித்துள்ளது. தீபக் சஹர் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்கிற கேள்வி நிலவி வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் சென்னை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

சன்ரைஸ் அணியை துவம்சம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ்..!!!

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

MANIMARAN M

மும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்…

MANIMARAN M