Newskadai.com
அரசியல்

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

Ravenndranath
Share this:

தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள ஏலக்காய் மற்றும் தேயிலைப் பொருட்கள் விளைவிக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் தேனி, போடிநாயக்கனுர் சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் 1924ம் ஆண்டு மதுரையில் இருந்து போடிக்கு மீட்டர் கேஜ் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது. பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட இந்த ரயில்வே பாதையை அகலப்பாதையாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக 150 கோடி ஒதுக்கப்படும் எனவும் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்து.

theni

ஆனால் அதற்கு 2015 ஆம் ஆண்டு வரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படாத நிலையில், விவசாயிகளும் பொது மக்களும் பெரிதும் ஏமாற்றமடைந்திருந்தனர். இதற்கு முன்னதாக நடந்த மக்களவை கூட்டத்தில் கூட அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியிருந்தார். மீட்டர் கே​ஜ்-ஆக இருந்த வழித்தடத்தை அகல ரயில் பாதையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட பணி என்ன ஆனது? இந்த தருணத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இக்கேள்வியை நான் முன்வைக்கிறேன். தேனி – போடி இடையே எப்போது ரயில்வரும்? இந்த ரயில் பாதை திட்டத்தை வேகப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

Ravenndranath

கொரோனா காலத்திலும் களத்தில் தீயாய் இறங்கி பணியாற்றி வரும் அதிமுக அரசின் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி முயற்சியால் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் துரிதப்படுத்த பட்டிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்து கொள்கிறோம்.

Ravenndranath

தேனி மக்களின் பத்து ஆண்டு கால கனவை நிறைவேற்றுவதே தனது லட்சியம் எனவும் மார்ச் மாதத்தில் ரயில் ஓட்டம் உறுதியாக தொடங்கும் எனவும் எம்.பி.ரவீந்திரநாத் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏற்கனவே தேனி மக்களின் மனம் கவர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மண்ணின் மைந்தன் என்பதை நிரூபித்துவிட்டார் என தேனிவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.


Share this:

Related posts

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA

“எங்க கோவணத்தையும் உருவிடாதீங்க”… நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!!

MANIMARAN M

பாஜகவுடன் சகவாசம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி…!!

AMARA

அடுத்த முதல்வர் யாரென்று?… நாங்கதான் முடிவு செய்வோம்…

MANIMARAN M

சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் எம்.எல்.ஏ.வை பொறுப்பிலிருத்து தூக்கியடித்த அதிமுக தலைமை…!!

NEWSKADAI

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M