Newskadai.com
அரசியல்

சூடுபிடிக்கும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை… அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

Share this:

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. அப்போது என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வராக்கியது சசிகலா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடியை பார்த்து கொந்தளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். அதனால் மீண்டும் தர்மயுத்தம் வந்துவிடுமோ என அதிமுக தொண்டர்கள் அஞ்சினர்.

இதையடுத்து வரும் 7ம் தேதி அன்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக சேர்ந்து முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது.

OPS

இந்நிலையில் அக்டோபர் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும் படி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதால், எம்.எல்.ஏ.க்களுடன் முதல் நாள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி அதில் கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

NEWSKADAI

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

MANIMARAN M