Newskadai.com
அரசியல்

#BREAKING கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு வழக்கில் அதிரடி… காதல் மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை…!

Share this:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தனது சொந்த ஊரான தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவல் தீயாய் பரவி வந்தது. திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்த செளந்தர்யா என்ற கல்லூரி மாணவியை தனது பெற்றோர், சொந்தங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே மணப்பெண்ணின் தந்தையான சுவாமி நாதன் வெளியிட்ட வீடியோவில் எனது குடும்பத்தினருடன் எம்.எல்.ஏ.பிரபு மகன் போல் பழகி வந்தார். அவருக்கும் என் பெண்ணுக்கும் 20 வயது வித்தியாசம். இந்நிலையில் எனது மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுவிட்டார். நான் சாதி பார்க்கவில்லை… ஆனால் வயது வித்தியாசம் முக்கியமல்லவா? என கதறினர்.

தனது திருமண வதந்திகளுக்கு காதல் மனைவியுடன் விளக்கம் அளித்த எம்.எல்.ஏ. பிரபு, நாங்கள் கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகிறோம். முறையாக செளந்தர்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டோம். ஆனால் பெண் தர மறுத்துவிட்டனர். வேறு வழியின்றியே எனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. பிரபு தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் மணப்பெண் சவுந்தர்யாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென எம்.எல்.ஏ.பிரபுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை பெண்ணின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜராகும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

கவலைக்கிடமான நிலையில் வெற்றிவேல்…. கைவிரித்த மருத்துவர்கள்… சோகத்தில் மூழ்கிய தினகரன்…!

AMARA

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு – துவங்கியது திமுகவின் தேர்தல் பணி

MANIMARAN M

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

#BREAKING மத்திய அமைச்சர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய மோடி, அமித் ஷா…!

AMARA

பாஜகவுடன் சகவாசம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி…!!

AMARA