Newskadai.com
அரசியல்

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

ADMK
Share this:

2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ”தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி அதனை முடிவு செய்வோம்” என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, “எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரம்” என வெளிப்படையாக அறிவித்ததால் பிரச்சனை பூதாகரமாக ஆரம்பித்தது. அதுகுறித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், மாஃபா. பாண்டியராஜன், கடம்பூர் ராஜு ஆகியோர் விதவிதமாக கருத்து கூறி வருகின்றனர்.

ADMK

சமீபத்தில் நடந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமியை முன்னிருத்தியே தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது தான் நல்லது என்றும், அதை ஓபிஎஸுக்கு எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியது. அதில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

CM

இதையடுத்து இன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை முடித்த பின்னர், தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, காமராஜ், விஜயபாஸ்கர் ஆகிய 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ADMK

அதன்பின்னர் அங்கிருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்ற 10 அமைச்சர்களும், சுமார் ஒரு மணி வரை ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் கிளம்பிய அமைச்சர்கள், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்   எவ்வித ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN