Newskadai.com
அரசியல்

ரூ.1 கோடி மட்டுமல்ல அதையும் தாண்டி அள்ளிக் கொடுத்த அதிமுக… அசத்தல் அறிவிப்பு…!

EPS-OPS
Share this:

கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அஜித், சிவகார்த்திகேயேன், ஜெயம் ரவி மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் உள்ளிட்டோர் லட்சங்களில் நிதி உதவி செய்துள்ளனர். சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

coronavirus

தற்போது அதிமுக சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயும்,அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும்; கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும்

மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

“கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே”

என்ற புரட்சித் தலைவரின் கொள்கை வழி நின்று கழக உடன்பிறப்புகள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.


Share this:

Related posts

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

MANIMARAN M

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

AMARA

இனி இவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு… மு.க.ஸ்டாலின் அதிரடி…!

AMARA

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

NEWSKADAI