Newskadai.com
அரசியல் சினிமா

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

Share this:

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல காலமாக புகார் கூறி வருகிறார். கடந்த 4 மாதங்களாகவே பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, சீமானை தாறுமாறாக விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறிக்கொண்டு களத்தில் இறங்கிய சீமானின் தம்பிகள், விஜயலட்சுமியை சொல்ல முடியாத அளாவிற்கு மோசமான வார்த்தைகளால் வறுத்தெடுத்து வந்தனர்.

 பலரிடம் நியாயம் கேட்டு கிடைக்காத நிலையில் இன்று அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சீமான் மற்றும் அவருடைய கட்சிகார்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். இது என்னுடைய பிபி மாத்திரை. இதிலிருந்து இரண்டு மாத்திரைகளை அதிகமாக போட்டுவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இறந்துவிடுவேன். சீமானுக்கு இந்த வாழ்க்கையை பிச்சைப்போட்ட பிரபாகரன் சாதிக்கார பொண்ணு நான். அவரிடம் வாழ்க்கை பிச்சை எடுத்த போது எல்லாம் சாதி பத்தி தெரியவில்லை. இனி வாழ வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

Seeman

நான் கர்நாடக பொண்ணுங்கிறதுக்காக சீமான் என்னை மிகவும் டார்ச்சர் செய்துவிட்டார். என்னை மிகவும் அசிங்கமாக விபச்சாரி என்றெல்லாம் விமர்சித்தீர்கள். அந்த அவமானத்தால் தான் நான் இந்த முடிவெடுத்தேன். சீமான் மற்றும் ஹரி நாடாரை எக்காரணம் கொண்டும் சும்மாவிடாதீங்க. ஹரி நாடார் என்னை விமர்சித்து வெளியிட்ட வீடியோவால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை அவர் மிகவும் தரக்குறைவாக பேசிவிட்டார். சீமானுக்கு முன் ஜாமீனுக்கு கூட கிடைக்க கூடாது. நான் பலரிடம் கெஞ்சிவிட்டேன், ஆனால் யாரும் எனக்கு நீதி கொடுக்கவில்லை. என்னுடைய மரணம் நல்ல பாடமாக அமைய வேண்டும் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.


Share this:

Related posts

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

அடுத்த ரவுண்டுக்கு அசத்தலாக தயாரான சிம்பு… அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

THAVAMANI NATARAJAN