ஹாலிவுட் டூ கோலிவுட் வரை ஷூட்டிங் இல்லாததால் திரைப்பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தாலும் கொரோனா விடுவதாக இல்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை என எவ்வித பாகுபடும் இன்றி அனைவரையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பாலிவுட்டின் பிக் ஸ்டாரான அமிதாப் பச்சனில் ஆரம்பித்து நடிகை நிக்கி கல்ராணி வரை பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரே செய்தி பிரபல பாடகர் பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்பதை தான்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த ஒரு வாரமாக எனது பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள உறவினர்கள், வேலையாட்கள் அனைவரும் பரிசோதனை செய்து மேற்கொண்டோம். அதில் சோகமான செய்தியாக எனது பெற்றோர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது”.
மேலும் படிக்க: http://ஐசியூ- வில் வனிதாவின் 3வது கணவர்; வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹரி…!!
“நல்ல வேலையாக எனக்கும், வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறோம். கடவுளின் ஆசிர்வாதத்தால் பெற்றோர் உடல்நிலை தற்போதைக்கு நன்றாக உள்ளது. உங்களின் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன்” உருக்கமாக பதிவிட்டுள்ளார்.