Newskadai.com
சினிமா

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

Share this:

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சி மூலம் முதன் முறையாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார் சாய் பல்லவி. அதன் பின்னர் மருத்துவம் படிக்கச் சென்ற சாய் பல்லவிக்கு லக்கி பிரைஸாக அமைந்தது “பிரேமம்” பட வாய்ப்பு. மலையாளத்தில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “பிரேமம்” படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக வந்து அசத்தினார்.

   

அந்த படத்தில் மலர் டீச்சராக வலம் வந்த சாய் பல்லவியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். அதன் பின்னர் தமிழில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பலரும் முயன்று கொண்டிருந்த போது, அந்த வாய்ப்பு இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு கிடைத்தது. கேரள சேட்டன்களின் மனம் கவர்ந்த சாய் பல்லவியை, தமிழ் ரசிகர்களுக்காக “தியா” படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சாய் பல்லவி, தனுஷுடன் நடித்த “மாரி 2” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி” பாடலுக்கு தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடே குலுக்கியது. தற்போது அந்த பாடல் 90 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும் படிக்க: http://சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு, அவருடைய ஏதார்த்தமான க்யூட் நடிப்பும், அசத்தலான நடனமும் டோலிவுட்டில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. தற்போது பிசியாக நடித்து வரும் சாய் பல்லவியிடம் தெலுங்கு தயாரிப்பாளர் ஒரு கோடிகளை கொட்டிக்கொடுத்து தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் சாய் பல்லவியோ அந்த கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம். இதுபற்றி விசாரித்த போது அந்த படத்தில் சாய் பல்லவிக்கு அநியாயத்திற்கு ஓவர் கிளாமரில் நடிக்கும் கேரக்டராம். அதனால் தான் கோடிகளில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இதனை தெரிந்து கொண்டதால் தான் சாய் பல்லவி அந்த தயாரிப்பாளருக்கு, ‘சாரி…’ சொல்லி வந்த வழியே திருப்பி அனுப்பிவிட்டாராம்.


Share this:

Related posts

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

AMARA

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி??

AMARA

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

‘அய்யோ அப்பா’ நடிகர் நிதிஷ் வீரா உடலைப் பார்த்து கதறி அழுத மகள்கள்! மனதை உருக வைக்கும் வீடியோ..!!

POONKUZHALI

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA