Newskadai.com
அரசியல் சினிமா தமிழ்நாடு

நடிகையிடம் சில்மிஷம் – முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

Share this:

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது சில ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டரன். இவர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு அமைச்சரானார். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார். இந்த நிலையில் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மே 28ம் தேதி சென்னை காவல் ஆணையத்தில் நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் திருமணம் செய்யாமல் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாந்தினி, ”மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தேன். 2017-ல் அதிமுக ஆட்சியின் போது தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதனால் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவருடனான உறவில் 3 முறை கருவுற்றேன். ஆனால் தனது அமைச்சர் பெயருக்கு கலங்கம் வரும் எனக்கூறி வலுக்கட்டாயமாக 3 முறையும் கருவைக் கலைக்கச் செய்தார்.

தற்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டுகிறார். அவருடன் நான் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவேன் எனக்கூறி மிரட்டுகிறார். மேலும், கூலி ஆட்களை ஏவி கொலை மிரட்டலும் விடுகிறார். திருமணம் செய்யாமல் 5 ஆண்டுகளாக என்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

சாந்தினியின் புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், ” புகார் அளித்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் தரப்பில் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள் , நான் பணாம் தர மறுத்ததால் எனது மீது பொய் புகார் கூறுகின்றனர்” என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால், மணிகண்டனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை செய்தியாளர்களிடம் சாந்தினி பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை புகார் அளித்த வழக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு), 323 ( தாக்குதல், காயம் உண்டாக்குதல்), 417 ( ஏமாற்றுதல், சீட்டிங்) 376 ( பாலியல் வன்கொடுமை), 506(1) (கொலை மிரட்டல்), 67 (IT Act) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவற்றில் சில ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் என்பதால் மணிகண்டன் முன்ஜாமீன் கோரினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.


Share this:

Related posts

ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் – ஏன் தெரியுமா..?

MANIMARAN M

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN