Newskadai.com
சினிமா

போதைப்பொருள் விவகாரத்தில் பகீர் திருப்பம்… ஜெயம் ரவி பட நடிகை அதிரடி கைது…!!

Ragini Dwivedi
Share this:

பெங்களூருவில் கடந்த மாதம் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேரை கைது செய்தது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திரைப் பிரபலங்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகை ராகினி திவேதிக்கு போதை பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகை ராகினி திவேதியை கடந்த புதன்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜாராகும்படி பெங்களூரு மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

Ragini Dwivedi

ஆனால் நடிகை அன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் ராகினியின் நண்பர் ரவிசங்கரை போதைப்பொருள் வழங்கல் குற்றச்சாட்டில் வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்ற அனுமதியுடன் நடிகை ராகினி திவேதியின் வீட்டில் பெங்களூரு மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Ragini Dwivedi

சோதனைக்கு பிறகு நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் புழக்கம் வெளிச்சத்திற்கு வருவது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

AMARA

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI