Newskadai.com
சினிமா

நடிகை பாவனாவிற்காக சங்கத்தையே தூக்கியெறிந்த பார்வதி… கதிகலங்கிப் போன ‘அம்மா’…!

Share this:

கொரோனாவால் முடங்கி கிடக்கும் மலையாள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு மலையாளத்தில் டுவென்டி-20 என்ற படம் வெளியானது. இதில் உச்ச நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன் லால், சுரேஷ் கோபி, ஜெய்ராம், திலீப் உட்பட மலையாள நடிகர், நடிகைகள் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அதேபோல் அனைத்து நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு படத்தை தயாரிக்க மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா முடிவெடுத்துள்ளது.

Parvathy

 

இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு டுவென்டி-20 படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் மீண்டும் நடிக்க உள்ளனர். ஆனால் இதில் நடிகை பாவனா மட்டும் இல்லை. ஏனென்றால் அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. இறந்து போன ஒருவர் எப்படி உயிருடன் வர முடியும்? என கேள்வி எழுப்பினர்.

அம்மா சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு பாவனா குறித்து இப்படி பேசியது அவருடைய நெருங்கிய தோழியும், சக நடிகையுமான பார்வதிக்கு கடும் கோவத்தை உருவாக்கியுள்ளது. இடைவேளை பாபுவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2018ல் என்னுடைய சில நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகினர். ஆனால் நான் விலகாமல் தொடர்ந்து நீடித்து வந்தேன். அதற்கு காரணம் உண்டு. அழிந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தை சீரமைக்க சிலராவது வேண்டுமே எனக் கருதியதால் தான் நான் நடிகர் சங்கத்தில் தொடர்ந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டதால் விலகுகிறேன் எனக்கூறியுள்ளார்.


Share this:

Related posts

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

ஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்…!

NEWSKADAI

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

NEWSKADAI

“நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் உயிரை பறிக்கிறது”.. சூர்யா கடும் கண்டனம்…!!

AMARA