Newskadai.com
சினிமா

அக்.30-ல் நடிகை காஜல் அகர்வாலுக்கு ‘டும்டும்டும்’ … மாப்பிள்ளை இவர் தான்…!

Share this:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் என்ற படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான காஜல் அகர்வால், பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தற்போது 34 வயதாகும் காஜலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோருடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சர்யா, மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் வரும் அக்டோபர் 30ம் தேதி தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில் இண்டீரியர் டிசைன் துறையில் தொழிலதிபராக வலம் வரும் கெளதம் கிட்சலு என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம். மும்பையில் நடக்க உள்ள திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். கொரோனா பிரச்சனை காரணமாக எளிமையாக திருமணம் நடக்க உள்ளதாக காஜல் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

AMARA

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI