Newskadai.com
தமிழ்நாடு

“நீட் தேர்வை கட்டாயம் எழுதி தான் ஆகனும்”… சேலத்தில் கொந்தளித்த பிரபல நடிகை…!!

Share this:

 நீட் தேர்வு பல்வேறான சர்சைகளுக்கு பிறகு வெற்றிகரமாக நேற்று முன்தினம் நடந்தது. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பட்டாளங்கள் என பலரும் போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யா அவர்களை குறிப்பிடலாம். ஆனால் நீட் தேர்வை மாணவர்கள் சந்தித்து தான் ஆகவேண்டும் என பிரபல நடிகை வாதிடுகிறார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கலை மற்றும் கலாச்சார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவரும் நடிகருமான காயத்ரி ரகுராம் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் நீட் தேர்வு குறித்து மாணவர்களின் தற்கொலைகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை, ஆனால் தமிழகத்தில் மட்டுமே தேர்வு அச்சம் காரணமாக தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வு மிகவும் எளிமையாக உள்ளது என மாணவர்கள் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து தைரியம் கொடுக்க வேண்டுமே தவிர பயத்தை உண்டு பண்ணக்கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக எடுத்துக்கொண்டு திமுக பொய்ப்பிரசாரங்கள் செய்து வருவதுடன் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டு வருகிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது கடைசி வரை மாணவர்கள் சந்தித்து தான் தீரவேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.


Share this:

Related posts

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M