Newskadai.com
கேலரி

கொரோனாவிலிருந்து மீண்டார் விஷால்… சத்தமே இல்லாமல் எடுத்துக்கொண்ட சூப்பர் சிகிச்சை….!

Share this:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட விஷால், தற்போது “துப்பறிவாளன் 2” படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார்.

 

லண்டனில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் மிஷ்கின் பாதியில் விலகினார். இதனால் மீதமுள்ள படத்தை விஷாலே இயக்க திட்டமிட்டுள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இடையில் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஷால் மற்றும் அவருடைய தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு விஷாலின் அப்பாவிற்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விஷாலுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

vishal

இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொண்ட இருவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் சில நாட்களுக்கு இருவரும் தங்களை தங்களே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 


Share this:

Related posts

ஒரு வழியா “பாகுபலி” வில்லனுக்கு கெட்டிமேளம் கொட்டியாச்சு… அட்டகாசமான கல்யாண போட்டோஸ் இதோ….!!

AMARA

ஹோம்லி டூ மார்டன்… நம்ம கோவை பொண்ணு அதுல்யாவின் அசத்தல் கிளிக்ஸ்…!

NEWSKADAI

3ஆம் இடம் தமிழகம்… 2ஆம் இடத்தில் இந்தியா… என உச்சத்தை தொட்ட கொரோனா…

NEWSKADAI

உடலை ஒட்டி உறவாடும் உடை… அழகை அப்பட்டமாக காட்டும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓவர் கிளாமர் கிளிக்ஸ்!!

NEWSKADAI

8 ஆயிரத்திற்கும் அதிகமான பலி எண்ணிக்கை… கோவை, நாகை, சேலம், மதுரையில் கொரோனா நிலை…!!

NEWSKADAI

5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு… தினம் தினமும் ஏற்றத்திலேயே கோவை, நாகை, சேலம், மதுரை நிலை…

NEWSKADAI