Newskadai.com
அரசியல்

கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!!

Vijaykanth
Share this:

கொரோனா தொற்றால் அரசியல் பிரமுகர்கள் பலர் பாதித்து வரும் நிலையில் நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. விஜயகாந்துக்கு பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை மணப்பாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

Vijaykanth

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தே.மு.தி.க கொடியிணை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மருத்துவனை நிர்வாகத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜயகாந்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


Share this:

Related posts

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA

ஒரே ஒரு போன்கால்…. அலறியடித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்…!

AMARA

அடுத்த வாரத்திலிருந்து அரசியல் சதுரங்கம் ஆரம்பம்… விடுதலை ஆகிறார் சசிகலா…!?

MANIMARAN M

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

வேட்பாளர்களின் “தேர்தல் செலவுக்காக”… கமல் ஹாசன் எடுத்த ‘அதிரடி’ முடிவு…!

MANIMARAN M

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

NEWSKADAI