Newskadai.com
சினிமா

தளபதி விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்… சோகத்தில் கோலிவுட்

Share this:

கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என சினிமாவையும் இழப்புகளையும் நாம் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு முக்கியமான சினிமா பிரபலங்களை நாம் இழந்திருக்கிறோம்…

பாலிவுட்டில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், நிஷிகாந்த் காமத், கன்னடத்தில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சார்ஜா, மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான அய்யப்பனும், கோசியும் பட இயக்குநர் சச்சி, தெலுங்கு மற்றும் தமிழ்பட வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி, வடிவேல் பாலாஜி மற்றும் நடிகர் ப்ளோரண்ட் பெரைரா என கொரோனா கால மரணங்கள்…

அந்த வகையில் தளபதி விஜய், அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான வேட்டைகாரன் படத்தின் இயக்குநர் பாபுசிவன் திடீர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். கில்லி பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர், குருவி மற்றும் பைரவா படங்களின் வசனம் எழுதியவர். வேட்டைகாரன் படத்திற்கு பின்பு எந்த பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில், தற்பொழுது சன் டிவியின் ’ராசாத்தி’ சீரியலில் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

படப்பிடிப்பில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். கல்லீரல் பிரச்சனையால் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 54 வயதான பாபுசிவனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரின் திடீர் உயிரிழப்பால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

ஓய்வெடுங்கள் இயக்குநர் பாபுசிவன்… #RIP


Share this:

Related posts

அடுத்த அதிர்ச்சி: “கரகாட்டக்காரன்” ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

AMARA

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

AMARA

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

NEWSKADAI

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN