இந்த வருடத்தில் நடந்து வரும் உயிரிழப்புகளின் பட்டியலில் என்னற்ற சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. அதில் குறிப்பாக படிப்பதற்கு ஸ்மார்ட் போன் இல்லை என்று தற்கொலை செய்வதும், ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்தற்காக தற்கொலை செய்வதும், பப்ஜி விளாயாடுவதற்கு போன் வாங்கி தரவில்லை என்று தூக்கு போட்டுக்கொள்வதும், போன்ற சம்பவங்கள் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை அணைவரும் வெறுக்கிறார்கள், நான் போகிறேன் என்றவாரு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். மேலும் நான் நிறைய வலிகளை தாண்டிவந்துள்ளேன். என் வாழ்கையில் இழப்புகளை மட்டுமே சந்தித்து வருகிறேன் இதுவரை அவற்றை எல்லாம் சமாளித்து வந்தேன். இனிமேல் என்னால் முடியாது, கடவுளும் எனக்கு சந்தோஷம் இல்லை என்ற முடிவில் இருக்கிறான் போல என்றவாரு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை அளித்து வந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் “நான் போகிறேன், என்னுடைய ஐடியை யாராவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும், “மாஸ்டர் படத்தையும் தலைவனையும் பார்க்காமல் போகிறேன். லவ் யூ தலைவா என கடைசியாக ட்வீட் செய்துவிட்டு, அதை விஜய்க்கும் டேக் செய்துள்ளார். இதையடுத்து விரக்தியில் இருந்த பாலா நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் தளபதியின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் பாலாவிற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றார்கள் விஜய் ரசிகர் பட்டாளங்கள். மேலும் #RIPBala என்ற ஹேஷ்டேக் மூலமாக தங்களை இரங்கலை பதிவு செய்து, அதை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமலும், விஜய் ரசிகர் என்ற சாயத்தை பூச வேண்டாம் என்றும் அஜித்தின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டடுள்ளார்கள்.