Newskadai.com
சினிமா

நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Tamannaah
Share this:

மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக திரைத்துறையில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரில் ஆரம்பித்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் வரை பல அதிர்ச்சி சம்பவங்களை அடுத்தடுத்து கேட்க வேண்டியுள்ளது.

Tamannaah

இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் அப்பா, அம்மா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மிகவும் உருக்கமாக தமன்னாவே சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் தமன்னாவிற்கு ஆறுதல் கூறினர்.

Tamannaah

இதனிடையே நடிகை தமன்னாவிற்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு சில கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தமன்னாவிற்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமன்னாவிற்கு அந்த தனியார் மருத்துவமனையிலே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Share this:

Related posts

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

உங்கள நினைச்சி சிரிக்கிறதா? கோவப்படுறதா? தெரியலையே சேதுபதி… மடலில் மறைமுகமாக சாடிய பாரதிராஜா…!

NEWSKADAI

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…!!! – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்…

MANIMARAN M

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA