Newskadai.com
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Share this:

நடிகர் சூர்யா – இறுதிச்சுற்று பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளாட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

Surya

 

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தடைபட்டிருந்தது. இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை போல, சூரைப்போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் படக்குழு அதனை மறுத்து வந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Surya

 

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ, பூக்கத்தானே செய்கறது’ என்ற எழுத்தாளர்‌ பிரபஞ்சனின்‌ வார்த்தைகள்‌ நம்பிக்கையின்‌ ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ்‌, ஒட்டுமொத்த மனிதகுலத்‌தின்‌ செயல்பாட்டையும்‌ நிறுத்‌தி வைத்‌திருக்கும்‌ சூழலில்‌, பிரச்சனைகளில்‌ மூழ்‌கவிடாமல்‌, நம்பிக்கையுடன்‌ எதிர்நீச்சல்‌ போடுவதே முக்கியம்‌.

 

Surya

 

இயக்குனர்‌ ‘சுதா கொங்குரா’ அவர்களின்‌ பல ஆண்டுகால உழைப்பில்‌ உருவாகியுள்ள ‘சூரரைப்‌ போற்று திரைப்படம்‌ எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம்‌ இருக்கும்‌. மிகப்பெரிய வெற்றியை அளிக்கும்‌ என்று நம்புகிற இத்‌திரைப்படத்தை, திரையரங்குகளில்‌ அமர்ந்து என்‌ பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன்‌ கண்டுகளிக்கவே மனம்‌ ஆவல்‌ கொள்கிறது. ஆனால்‌, காலம்‌. தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின்‌ கற்பனை திறனிலும்‌, கடுமையான உழைப்பிலும்‌ உருவாகிய‌ இந்த திரைப்படத்தைச்‌ சரியான நேரத்தில்‌ மக்களிடம்‌ கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின்‌ முக்கிய கடமை.

 

Surya

 

எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்‌ நிறுவனம்‌ இதுவரை எட்டு படங்களைத்‌ தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும்‌ பத்து படங்கள்‌ தயாரிப்பில்‌ உள்ளன. என்னைச்‌ சார்ந்திருக்கும் படைப்பாளிகள்‌ உட்பட பலரின்‌ நலன்‌ கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில்‌, நடிகராக இல்லாமல்‌, தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்‌.

 

Surya

 

‘சூரரைப்‌ போற்று’ திரைப்படத்தை, ‘அமேசான்‌ ப்ரைம்‌ வீடியோ மூலம்‌ இணையம்‌ வழி வெளியிட முடிவு செய்‌திருக்குறோம்‌. தயாரிப்பாளராக மனசாட்சியுடன்‌ எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும்‌, என்‌ திரைப்படங்களைத்‌ திரையரங்ககளில்‌ காண விரும்புகிற பொதுமக்களும்‌, நற்பணி இயக்கத்தைச்‌ சேர்ந்த தம்பி தங்கைகள்‌ உள்ளிட்ட அனைவரும்‌ புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. உங்கள்‌ அனைவரின்‌ மனம்கவர்ந்த திரைப்படமாக “சூரரைப்‌ போற்று’ நிச்சயம்‌ அமையும்‌. மக்கள்‌ மகிழ்ச்சியோடு திரையரங்கம்‌ வந்து படம்‌ பார்க்கும்‌ இயல்புநிலை திரும்புவதற்குள்‌, கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில்‌ நடித்து திரையரங்களில்‌ ரிலீஸ்‌ செய்துவிட முடியுமென நம்புகிறேன்‌. அதற்கான முயற்சிகளைத்‌ தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்‌..

 

 

இருப்பதை அனைவருடன்‌ பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும்‌ செயல்படுத்‌தியும்‌ வருகிறேன்‌. ‘சூரரைப்‌ போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில்‌ இருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்‌.

 

 

பொதுமக்களுக்கும்‌, திரையுலகை சார்ந்தவர்களுக்கும்‌, தன்னலம்‌ பாராமல்‌ கொரானா யுத்த களத்தில்‌: முன்றின்று பணியாற்றியவர்களுக்கும்‌, இந்த ஐந்துகோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌. உரியவர்களிடம்‌ ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. உங்கள்‌ அனைவரின்‌ அன்பும்‌, ஆதரவும்‌, வாழ்த்தும்‌ தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌. இந்த நெருக்கடி, சூழலை மனவுறுதியுடன்‌ எதிர்த்து மீண்டு எழுவோம்‌. நன்றி.. இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…!

THAVAMANI NATARAJAN

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA