Newskadai.com
சினிமா

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

suriya
Share this:

“இறுதிச்சுற்று” பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் விமானத்தை அறிமுகம் செய்த ஜி.ஆர். கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளியும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Suriya
    

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட சம்மதித்தால் 55 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய், அஜித்தைப் போலவே சூர்யாவும் தனது ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட்டமாக படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் அதை மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியான “வெய்யோன் சில்லி” பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டடித்தது. இதையடுத்து நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காட்டு பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து, காட்டு பயலே பாடலின் முழு லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. திகட்ட, திகட்ட சூர்யா, அபர்ணா பால முரளி ரொமான்ஸ் காட்சிகளுடன் இடம் பெற்றிருக்கும் பாடல், சில மணி நேரங்களிலேயே 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலின் லிங்க் இதோ…


Share this:

Related posts

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

AMARA

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து கவலைக்கிடம்… எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை…!!

AMARA

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI