Newskadai.com
சினிமா

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

Share this:

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் அனைத்தும் மூடப்படுள்ளன. இதனால் புதிய படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் திண்டாடி வந்தனர். இந்த லாக்டவுன் நேரத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட ஓடிடி எனப்படும் ஆன்லைன் தளங்களும் கோடிகளை கொட்டி கொடுத்து படங்களை வாங்க தயாராக இருந்தன. அதனால் கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி-யில் வெளியிட முன்வந்தனர்.

   இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படும் சம்பவம் “பொன்மகள் வந்தாள்” ஓடிடி ரிலீஸ். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் 4.5 கோடியில் தயாரித்த இந்த திரைப்படம் ரூ.9 கோடிக்கு அமேசான் பிரைமில் விற்பனையானது. இதையடுத்து மே 29ம் தேதி அந்த படம் ரிலீஸ் ஆனது, விமர்சன பெரும் வரவேற்பை பெற்றது.

Suriya

அன்றிலிருந்தே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சூர்யாவின் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என கூறிவந்தனர். தற்போது ஆகஸ்ட் மாதத்தில் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், நடிகர் சிவக்குமார் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகாவின் எந்த படங்களையும் தியேட்டர்களில் திரையிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

AMARA

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“நாட்டின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்”… உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக சூர்யா உறுதி…!

MANIMARAN M

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI