Newskadai.com
தமிழ்நாடு

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

Share this:

திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் வலம் வந்த நடிகர் சூர்யபிரகாஷ், தூரல் நின்னு போச்சு படம் மூலம் பிரபலமானவர். இதனை தொடர்ந்து  தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் அதிமுகவில் சிறப்பு பேச்சாளராகவும் வலம் வருகிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ் புதிய திரைப்படமான நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் விஜய் ஹரிஷ் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாதாக ஹரிஷின் காதலி காவல் நிலையித்தில் புகார் செய்ததின் பேரில் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறான பொறுப்பற்ற செயலில் தனது மகன் ஈடுபட்டதால் மிகவும் கவலையடைந்தார் அப்பா சூர்யகாந்த். மேலும்  கொரோனா பரவல் காரணமாக படவாய்ப்புகளும் இல்லாமல் வருமானமின்றி, சர்க்கரை நோயாளியான இவர் தற்போது உணவிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறார். தன் நிலையை அறிந்து திரைப்பட பிரபலங்களோ அல்லது அரசியல் வட்டாரங்களோ உதவி செய்வார்கள் என நம்பி காத்துகொண்டிருக்கிறார். எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும், உயர உயர பறந்தாலும் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய சுய ஒழுக்கமும், நற்குணங்களும் இல்லையேன்றால்… அவனும் அவனை சார்ந்துள்ளவர்களும் மிகவும் பாதிக்கப்படுவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி…

Share this:

Related posts

அடிமடியிலேயே கைவைத்த ‘கொரோனா’… அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடல்…!!

AMARA

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M

தமிழகம் முழுவதும் இன்று ஓடத் துவங்கிய பஸ் மற்றும் ரயில்கள் : மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..!!!

MANIMARAN M

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M