Newskadai.com
சினிமா

‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

Share this:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காமெடி மன்னனாக வலம் வந்த வடிவேல் பாலாஜி. நேற்று உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வடிவேல் பாலாஜி, 4 தனியார் மருத்துவமனைகளில் மாறி, மாறி சிகிச்சை பெற்றுள்ளார். பணப்பிரச்சனை காரணமாகவே அவர் இப்படி மாற்றப்பட்டுள்ளார்.

vadivel balaji

இறுதியாக சிகிச்சைக்கு முற்றிலும் பணமில்லாத நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். 45 வயதே ஆன வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து வடிவேல் பாலாஜியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது. அதற்கு முன்னதாக சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பணமின்றி கணவனை பறிகொடுத்த சோகத்தில் மனைவியும், ‘கண்ண தொறந்து பாருப்பா’… என மகளும் கதறி அழுத காட்சிகள் காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது. அதே விஜய் டி.வி.யில் ஆங்கராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், மறைந்த வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க : http://காமெடி மன்னன் ‘வடிவேல்’ பாலாஜி இறுதி நிமிடங்கள்… கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி, மகள்… இதயத்தை சுக்கு நூறாய் உடைக்கும் வீடியோ…!!


Share this:

Related posts

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

AMARA

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறப்பு?… மத்திய அரசுடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நிறைவு…!!

AMARA

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI