Newskadai.com
சினிமா

‘அண்ணன் வீடு திரும்பிவிட்டார்’… நடிகர் சூர்யாவின் உடல் நிலை குறித்து கார்த்தி ட்வீட்…!

Share this:

கொரோனா பிரச்சனைகளில் இருந்து மீண்டும் இந்த ஆண்டாவது செழிப்பான வளர்ச்சியை காண வேண்டுமென திரையுலகம் முயற்சித்து வருகிறது. தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு, அதனை மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு செலுத்தும் வேலையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனில் ஆரம்பித்து மலையாள நடிகர் பிரித்விராஜ், விஷால் மற்றும் நடிகைகள் நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், தமன்னா உள்ளிட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி தீவிர சிகிச்சைகுப் பின்னர் மீண்டனர்.

Suriya

சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சூர்யா, ‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சூர்யா பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா இன்று வீடு திரும்பியுள்ளார். தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி, “அண்ணன் பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளார். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

AMARA

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

சர்வதேச விருதுகளை குவித்த ‘வாய்தா’… வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்…!

AMARA

உங்கள நினைச்சி சிரிக்கிறதா? கோவப்படுறதா? தெரியலையே சேதுபதி… மடலில் மறைமுகமாக சாடிய பாரதிராஜா…!

NEWSKADAI

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்… வைரல் போட்டோஸ்…!

AMARA