Newskadai.com
சினிமா

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

Share this:

“காதல்” திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் சந்தியா, அவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதனால் 2012ல் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் பிலிம்பேர் விருதை பெற்றார். அதை தொடர்ந்து வல்லவன், டிஷ்யூம், கூனல் நகர், கண்ணாமூச்சி ஏனடா என தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி என்று 40க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.

Sandhya

இதை தொடர்ந்து 2015ல் சென்னயை சேர்ந்த கம்யூட்டர் இன்ஜினியர்  வெங்கட் சந்திரசேகரன் என்பவரை குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார் அந்த சமயத்தில் சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது, இதனால் தனது வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரன நிதிக்கு கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

இவரின் திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை சந்தியா அதன்பின் 4 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சந்தியா வெங்கட் சந்திரசேகரன் தம்பதிக்கு ஷேமா என்ற பெண்குழந்தை உள்ளது குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்ததால் நடிப்பில் நாட்டமில்லாமல் இருந்தார். இதை தொடர்ந்து தற்போது சன் டீவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் கண்மணி தொடரில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து சன் டிவி வெளியிட்டுள்ள புரோமோ வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது.

கண்மனி தொடர் 2018 ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது இதில் பூர்ணிமா பாக்யராஜ், வீஷா, சஞ்சீவ், ஷாம்பவி குருமூர்த்தி ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

அந்த விஷயத்தில் தம்பியை மிஞ்சுவாரா செல்வராகவன்?… தனுஷ் பட ஹீரோயினுடன் வெளியான அசத்தல் போஸ்டர்…!!

MANIMARAN M

அஜித்துக்கு மட்டும் ஓல்டு கெட்டப்பா?… “வக்கீல் சாப்” மோஷன் போஸ்டரை பார்த்து கொந்தளிக்கும் தல ஃபேன்ஸ்…!

AMARA

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

பிரதமரையே அதிர்ச்சியடைய வைத்த பிரபல பாடகரின் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

மறைந்த நடிகர் சுஷாந்திற்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான்…!!

NEWSKADAI