Newskadai.com
தமிழ்நாடு

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

Share this:

100% உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்த, தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உயரிய சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் உயிருடன் மீட்டு உள்ளனர் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

கொரோனா (covid-19) நோய்தொற்று நாளுக்கு நாள் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தங்களுக்கும் அந்த நோய் தொற்ற வாய்ப்பு இருப்பதை அறிந்தும் மருத்துவர்கள் தன்னலம் பார்க்காமல் சேவையாற்றி வருகின்றனர். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனை மருத்துவர்களே சிறப்பான களப்பணி ஆற்றி வருகின்றனர்.

சுமார் 26 வயது நிறைந்த திருச்செந்தூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இதய நோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது. மிகுந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் நோயாளியை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி விட்டனர்.

மேலும் படிக்க:http://தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த பொழுது மூச்சுத் திணறல் உடன் பிரசவ வலியும் ஏற்பட்டு இதயம் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை தாய் சேய் நல மருத்துவர்கள் மகாலட்சுமி திவ்யா மயக்க மருந்து மருத்துவர்கள் செல்வகுமார் ஆரோக்கிய மைக்கேல் ராஜா மற்றும் ஸ்ரீ லட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் உயிருக்கு போராடிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து அறுவைசிகிச்சை ஏதுமில்லாமல் வலியில்லா சுகப்பிரசவம் செய்து தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளனர்.

100% உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்த, தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உயரிய சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் உயிருடன் மீட்டு உள்ள மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மதுரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.


Share this:

Related posts

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

மக்களே உஷார்: ‘ரூ.2000 அபராதம்’ சென்னை மாநகராட்சி பிறப்பித்த திடீர் எச்சரிக்கை…!

NEWSKADAI

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

நாகை எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

POONKUZHALI

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இவர்களுக்கும் முன்னுரிமை… அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆர்டர்..!

NEWSKADAI