Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

Share this:

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் பொறுமையின் சிகரமாம் பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் இந்த ஆடி மாத்தில் காவிரி ஆற்றில் புது வெள்ளம் பொங்கிவரும். அந்த சமயத்தில் மக்கள் காவிரித்தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது ஆடிபெருக்கு விழா ஆகும்.

ஆடிப்பெருக்கு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்படும் மங்கள விழாவாக கொண்டாடப்படுகிறது, ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் பெண்களை சார்ந்தே அமைந்திருக்கும். இம்மாதத்தில் வரும் அனைத்து திதி மற்றும் நட்சத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாக ஜோதிட சாஸ்த்திரங்கள் தெரிவிக்கின்றது.

“ஆடிப்பட்டம் தேடி விதைபோம்” என்பதற்கு இணங்க ஆடி மாதத்தில் விவசாயிகள் தங்களின் உழவுப்பணியைத் துவங்குவார்கள். ஆடிப்பதினெட்டில் பொங்கிவரும் காவிரியை போல் என்றும் குடும்பத்தில் சந்தோசம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக திருமணமான பெண்களுக்கு தாலி பிரித்துக்கோர்பார்கள், அவ்வாறு தாலி மாற்றும் பெண்கள் ஏழு வெற்றிலை பாக்குடன் மஞ்சள் குங்குமம் மற்றும் சேலையை வைத்து ஐந்து பேருக்கு தானம் வழங்குவதை சிறப்பாக கருதுகிறார்கள். ஆடிப்பெருக்கில் வழங்கப்படும். தானம் மற்றும் நல்ல செயல்கள் அனைத்தும் புண்ணிய பலன்களை தரும். ஆடிப்பதினெட்டு அன்று காவிரியில் நீராடுவதால் தங்களின் நோய்நொடிகள் மற்றும் பாவங்கள் விலகுவதாக மக்கள் நம்பிக்கையுடன் நீராடி செல்கிறார்கள்.

ஆடிப்பதினெட்டு அன்று நடைபெரும் சிறப்புகள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்திருக்கும் படித்துறையில் ஸ்ரீரங்கநாதரின் தங்கைக்கு சீர் கொண்டுவந்து புனிதமான காவிரியில் சமர்ப்பிக்கப்படுகிறது.

பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி எடுத்துவந்து தங்களின் வேண்டுதல்களோடு முளைப்பாரியை காவிரி ஆற்றில் விடுவதால், ஆண்டு முழுவதும் அனைத்து வளங்களையும் காவிரிதாய் வழங்கும் என்று வழிபடுகிறார்கள்.

ஆடிப்பெருக்கு நாளில் தலைவாழை இழையில் பூச்சரம், தாம்பூலம், கருகுமணி, வளையல்கள், வாழைபழம், தேங்காய், விலாம்பழம், நாவற்பழங்கள், மாம்பிஞ்சு, வெள்ளரிக்காய், மற்று காப்பரிசி போன்றவற்றை படைத்து தீபம் ஏற்றி வணங்குவார்கள். அதன்பின் படையல்களை காவிரியாற்றில் தீபத்துடன் மிதக்க விடுவார்கள். இவ்வாறாக நமக்கும் நதிக்கும் உள்ள உறவை ஆடிப்பதினெட்டான ஆடிப்பெருக்கில்  காவிரியாற்றில் காணமுடிகிறது.

கோவில்களில் தடை: வீட்டிலேயே வழிபாடுவது எப்படி?

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மாதம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களிலும், கோவில்களிலும் குவிய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர். அதனால் வீட்டிலேயே மக்கள் பூஜைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் வீட்டின் பூஜை அறையிலேயே காப்பரிசி வைத்தோ அல்லது மஞ்சள் கயிற்றை முடிந்து வைத்தோ வழிபாடு நடத்தலாம்.

குழந்தை பாக்கியம் வேண்டி பூஜை செய்ய விரும்புவோர் விதவிதமாக சமையல் செய்து வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டு காவிரி தாயை நினைத்தும் வழிபாடு நடத்தலாம். கன்னிப்பெண்கள் இன்றைய தினத்தில் வழிபாடு நடத்தினால் திருமணம் கைகூடும் என்பதும், தாலி பிரித்து கோர்ப்பதால் கணவனின் ஆயுட்காலம் பலம் பெரும் என்பது நம்பிக்கை. சகல செல்வங்களையும் அள்ளித் தரும் ஆடிப்பெருக்கை வீட்டிலிருந்த படியே கொண்டாடி மகிழ்வோம்…

 

 


Share this:

Related posts

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

செல்போனிலேயே சுலபமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்…!!

NEWSKADAI

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN