Newskadai.com
லைஃப் ஸ்டைல்

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Share this:

வானம் பார்த்து விவசாயம் செய்த காலங்கள் எல்லாம் பொய்த்துப் போன இந்த வறட்சியான காலங்களிலும், ஆடி மாதம் விதைத்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் நம் விவசாயிகளிடம் உண்டு.

மேலும் படிக்க:http://பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

ஆடி 18க்குப் பிறகு விவசாயிகள், விவசாயம் செழிக்க விதைக்க தொடங்குவார்கள். ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆடி மாதம் தொடங்கி பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு அதிகமான விளைச்சலைக் கொடுக்கும்.

கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்களில் பெய்யக்கூடிய மிதமான மழையில் மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள், மண்ணை வளப்படுத்தும் பூச்சிகள் உருவாக தொடங்கும். இப்படி மண் வளத்தைப் பாதுகாக்கும் சிறு பூச்சிகள் முதல் பயிர்களை காக்கும் சூரியன் வரை ஆற்றலாக செயல்படுவதால், இம்மாதம் விளைச்சலுக்கு ஏற்ற மாதமாக உணர்ந்து  செயல்பட்டு நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க:http://நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து மண் இதமாக இளக தொடங்கும். இதனாலேயே ஆடி மாதம் விதைக்கச் சிறந்தது, பிறகு பயிர்களும் செழித்து விளைச்சல் அதிகரித்து அறுவடையில் மகிழ்ச்சியடைந்த நம் முன்னோர்கள்  “ஆடி பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியை உண்டாக்கினார்கள். இதன் அடிப்படையில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் விதைகளை விதைக்க தொடங்கியுள்ளனர்.


Share this:

Related posts

அப்படி என்ன தான் இருக்கு கும்பகோணத்தில் வாங்க பார்க்கலாம்…!!

AMARA

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை…

NEWSKADAI

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI