Newskadai.com
லைஃப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஆபத்து..!! நச்சுத்தன்மை நிறைந்த டயபர்கள்..!! அதிர்ச்சி ரிப்போர்ட்

Share this:

நவீனம் மிகுந்த இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பில் டயபர் முக்கிய பங்காற்றி வருகிறது. குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் இத்தகைய டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வரை டயபர் பயன்படுத்தப்படுகிறது.

நாள் முழுவதும் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்து வருகின்றனர். டயபர் பயன்படுத்துவதால் குழந்தைகள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அணிவிக்கின்றனர். ஆனால் டயபர்கள் உடலுக்கு கடும் தீங்குகளை விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த Toxics Link என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் டயபரில் ‘Phthalates’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த வேதிப்பொருளினால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளது. டயபர்களை குப்பையில் வீசுவதால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.

சில நாடுகளில் இந்த வேதிப்பொருள் குழந்தைகளுக்கான பொருட்களில் பயன்படுத்த தடையுள்ளது. இந்தியாவிலும் சில பொருட்களுக்கு இந்த வேதிப்பொருள் தடை செய்யப்பட்டிருந்தாலும், டயபர்களில் பயன்படுத்தவும் தடை விதிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வை நடத்திய நிறுவனத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

NEWSKADAI

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

அதிகரித்த தங்கம் விலை… இன்று வெள்ளியின் நிலை..!?

NEWSKADAI

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

கணவன்மார்கள் கவனத்திற்கு: மாதம் ரூ.1000 தர மனைவிக்கு உத்தரவு… நீதிமன்றம் அதிரடி…!

MANIMARAN M

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN