Newskadai.com
அரசியல்

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்…. 3ல் இருந்து 5 ஆக உயர்வு…!!

DMK
Share this:

திமுகவின் முக்கிய பதவிகளாக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் 67 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் காணொலி வாயிலாக இணைந்துள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.                        

கலைஞர் அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பொதுச்செயலாளர் தேர்விற்காக திமுக வரலாற்றிலேயே முதன் முறையாக காணொலி காட்சி மூலமாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. வேறு யாரும் போட்டியிடாத காரணத்தால் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் எவ்வித போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுகவில் பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக துணை பொதுச்செயலாளர் பதவி உள்ளது. திமுகவின் கட்சி விதிகளின் படி 3 பேர் தான் துணைப் பொதுச்செயலாளர்களாக இருக்க முடியும். ஆனால் அந்த விதியில் சில மாற்றங்களை செய்து 5 பேரை துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் புதிய துணை பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐ.பெரிசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் திமுக துணை பொதுச்செயலாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 5 ஆக அதிகரித்துள்ளது.


Share this:

Related posts

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

“சாதி அரசியல் செய்பவரோடு கூட்டணி இல்லை”… இறங்கி வந்த ராமதாஸ்… எகிறி அடிக்கும் திருமா…!!

MANIMARAN M

முதல்வர் வேட்பாளர் யார்.. ? முடிவு எடுக்க முடியாமல் திணறும் அதிமுக…

MANIMARAN M

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

AMARA