2016 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கிய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இத்திரைபடத்தின் மூலம் ஹீரோ சுஷாந்த் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல பாலிவுட் படங்களில் நடித்து வந்த அவர், திடீரென்று ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியடையச் செய்தது.
இச்சம்பவம் பாலிவுட் நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகேஷ் ஷப்ரா இயக்கத்தில் “தில் பேச்சாரா” என்ற படத்தில் தான் இவர் கடைசியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் சவுகான், ஹிரிடே கட்டானி, சுனிதி சவுகான் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் “தில் பேச்சாரா” படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினார்கள்.