Newskadai.com
தமிழ்நாடு

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

Share this:

தமிழகத்தில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி காணாமல் போயுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், நீர் நிலைகளை மீட்கக் கோரியும் பல்வேறு போராட்டங்களும் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன. தற்போது திருவாரூர் நகரில் நடிகர் வடிவேல் பாணியில் குளத்தை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நகராட்சி பகுதிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்துள்ளன. நீர் வழி பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல குளங்கள் நீர் ஆதாரமின்றி இருக்கின்றன.

இதில் பெரும்பாலான குளங்களே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலரகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருவாரூர் நகராட்சி 25 வது வார்டு மேட்டுபாளையம் பகுதியில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என்றும், அதனை மீட்டுத் தர வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக மேட்டுபாளையம் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுவரை இது குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், செட்டிகுளத்தை காணவில்லை என்று மேட்டுப்பாளைய பகுதி மக்கள் போஸ்டர் அடித்து நகரில் பல இடங்களில் ஒட்டியுள்ளனர். மழைக் காலம் நெருங்கி வரும் நிலையில் நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தைப் பெருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Share this:

Related posts

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

கரைபுரண்டோடிய தென்பெண்ணை ஆறு… விபரீதம் புரியாமல் குளித்த இளைஞர்கள் மூழ்கி பலி…!!

THAVAMANI NATARAJAN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M