Newskadai.com
தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு தடை போட்ட ஹவுஸ் ஓனர்… தலையில் அடித்துக் கொன்ற தளபதி ரசிகர்…!!

Share this:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆனந்த ஜோதி(53) என்பவருடைய மனைவி சித்ரா(49). கடந்த 18 ஆம் தேதி வெள்ளக்கிழமை அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த சித்ரா தலையில் இரும்பு பைப்பால் தாக்கப்பட்டு தனது வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். போலிசார் விசாரணையில் சித்ரா வீடருகே உள்ள பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் கொலை நடந்த நேரத்தில் ஒரு வாலிபர் அங்கிருந்து ஓடியது தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரமாதலால் முகம் சரியாக பதிவாகமல் கொலையாளியை அடையாளம் காணமுடியாமல் விசாரணையை மேற்கொண்டனர். இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கிராமம் கணபதி நகரை சேர்ந்த தாஜூதீன் மகன் சையது ரியாசுதீன்(29) என்பவர் சட்டநாதபுரம் நிர்வாக அலுவலர் பாஸ்கர் என்பவரிடம் சித்ராவை தான் கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் ரியாசுதீனை சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல் துறை விசாரணையில், ரியாசுதீன் சட்டநாதபுரத்தை சார்ந்தவர். விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியான இவர் ஜல்லி, மணல் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சீர்காழியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த பிருந்தா(27) என்பவரை சந்தித்துள்ளார். அதிலிருந்து இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு தீவிர காதாலாக மாறியுள்ளது. இந்த சூழலில் 2016-ம் ஆண்டு பிருந்தாவை அவரது பெற்றோர், அரியலூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். கணவர் செல்வகுமார் வெளிநாடு சென்றுவிட்டார். இந்நிலையில் பிருந்தா ரியாசுதீனுக்குமிடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது மூன்று வயது குழந்தையுடம் பிருந்தா சீர்காழிக்கே திரும்பி வந்து சித்ரா வீட்டு மாடியில் உள்ள வீட்டிற்கு குடியேறியுள்ளார். அருகிலேயே வந்த பின் பிருந்தா வீட்டுக்கு ரியாசுதீன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர்களின் கள்ளத் தொடர்பு வீட்டு உரிமையாளர் சித்ராவிற்கு தெரியவர கண்டித்துள்ளார். ஆனாலும் இது மீண்டும் தொடரவே, சித்ரா பிருந்தாவை வீட்டை காலி செய்யும்படிக் கூறியுள்ளார். இதனால் பிருந்தா மற்றும் ரியாசுதீன் இருவரும் ஆத்திரமடைந்து சித்ராவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் அதிகாலையில் கோலம்போடும் பழக்கமுடைய சித்ராவை யாருமில்லாத அந்த நேரத்தில் கொலை செய்ய 18 ஆம் தேதி காலை இரும்பு பைப்பால் கோலம் போட்டுக்கொண்டிருந்த சித்ராவின் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய பிருந்தாவையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Share this:

Related posts

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

MANIMARAN M