Newskadai.com
தமிழ்நாடு

கரூரில் நடந்த கொடூரம்: காரில் பயணித்த புதுமண தம்பதி விபத்தில் உயிரிழப்பு…!!

accident
Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் சந்தோஷ் (26), இவர் மதுரை அலங்காநல்லூரில் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். மணிக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதி மதுரையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், தனது சொந்த ஊரான கிருஷ்ணகிருக்கு நேற்று காரில் புறப்பட்டுள்ளனர்.

accident

காரை புதுமாப்பிள்ளை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார். கரூர் மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளவாபாளையம் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகை மீது படுபயங்கர வேகத்துடன் மோதியுள்ளது. அப்போது காரின் முன்பக்கம் இருந்த உயிர் காக்கும் பலூன் விரிந்துள்ளது. ஆனால் காருக்கு பின்னால் இருந்த சிலிண்டர்கள் வேகமாக மோதியதால், புதுமண தம்பதி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Hospital

இந்த விபத்தில் காரின் முன் பகுதி முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியது. சடலங்களை கைப்பற்றி போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

சிங்கப் பெண் சாவித்திரி: ஆதரவற்றோர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் காவலர்…!

MANIMARAN M

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI