Newskadai.com
தமிழ்நாடு

“அவர் இல்லாம என்னால வாழ முடியாது” – 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம் பெண்…!!!

Share this:

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவில் நரேஷ்குமார்(32) என்பவர் அவரது மனைவி கோமதி(27), மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் நரேஷ்குமார் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். நரேஷ்குமாரின் திடீர் மரணத்தால் அவரது இழப்பை தாங்க முடியாமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்ள கோமதி முடிவு செய்துள்ளார்.

நேற்று இரவு கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்த கொசு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்து கோமதியும் குடித்திருக்கிறார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது மகள் ரியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். கோமதிக்கும் அவரது மகன் நித்தில்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவறிந்து வந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். கோமதி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. என்னால அவர் இல்லாம வாழ முடியல, சின்ன சின்ன விஷயமும் அவர மட்டும் தான் ஞாபகப்படுத்துது. அவர் இல்லாத வாழ்க்கைய என்னால சத்தியமா வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே. அவர் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாரு. அதனால நானும் என் ரெண்டு புள்ளைங்களும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோஷமா 4 பேரும் மேலோகத்தில் வாழ போறோம்” என்று கோமதி உருக்கத்துடன் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

சேலத்தில் கொரோனாவால் 2 மகன்கள் பலி… சோகத்தில் உயிரிழந்த தாய்… ஒரே வீட்டில் 3 மரணம்…!

THAVAMANI NATARAJAN

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வில் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி… வெற்றிக்கான காரணம் என்ன தெரியுமா?

AMARA

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

MANIMARAN M