Newskadai.com
இந்தியா

“பசு பாதுகாவலர்கள்” என்ற போர்வையில் வெறியாட்டம்… ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் வீடியோ…!!

Share this:

இந்தியாவில் சிறுபான்மையினர் பல வகைகளில் தாக்குதல்களுக்கு உள்ளாகும் சூழலில், குறிப்பாக வட இந்தியாவில் மாட்டிறைச்சிக்காக இஸ்லாமியர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. நேற்று டெல்லி குர்கிராம் சந்தைப் பகுதியில் சிறிய சரக்கேற்றும் வாகனத்தில் மாட்டிறைச்சிக் கடத்தப்படுவதாக கருதி பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சுற்றி வந்த 10 பேர் கொண்ட கும்பல் 25 வயதுள்ள லுக்மான் என்ற இளைஞரை சரமாரியாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளது.

மேலும் படிக்க:http://மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் லுக்மான் கூறும்பொழுது, “நேற்று காலை குர்கிராம் பகுதியில் என்னுடைய சரக்கேற்றும் சிறிய வாகனத்தில் சென்றும் கொண்டிருக்கும் பொழுது, 10 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை நிறுத்தும்படி கத்தி கூச்சலிட்டனர், இவர்களிடமிருந்து பாதுகாப்பு பெற நான் வேகமாக சென்றேன். என்னுடைய வாகனத்தை 8 கீலோ மீட்டர் தூரம் வரை துரத்தி வந்தனர், நான் சடர் பஜார் அருகில் வந்தபொழுது என் வாகனத்தை பிடித்தனர். பின்னர் என்னை வெளியில் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கினார்கள். மாட்டிறைச்சி கடத்துகிறாயா என்று கத்திக் கொண்டு மொத்த கும்பலும் என்னை தாக்கியதில் என்னுடைய மண்டை உடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் சில போலிசாரும் அவ்விடத்தில் கூட, போலிசாரையும் தாக்கிவிட்டு என்னை மூட்டையாக கட்டி குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு தூக்கி சென்று, அங்கு வைத்தும் என்னை தாக்கினார்கள்”, என்று லுக்மான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:http://சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

பசு குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட இளைஞர்.. டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்.

பசு குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட இளைஞர்.. டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்.

Posted by News Kadai on Saturday, August 1, 2020

அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த போலீசார், குண்டர்களிடமிருந்து உயிருக்குப் போராடிய அந்த இளைஞரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான வீடியோ சமூக வளைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு இளைஞரை 10 பேர் சுற்றி நின்று ரத்தம் சொட்ட, சொட்ட ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டிதனமாக தாக்கும் காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது. இந்த தாக்குதல் சம்பந்தமாக பாட்ஷாப்பூர் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அறியப்படுகிறது. கடந்த 2015ல் நொய்டாவின் தாத்ரியில் மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக ஒருவரை பசு பாதுகாவலர்கள் என தங்களை சொல்லிக்கொள்ளும் கும்பல் அடித்து கொன்ற சம்பவத்தின் நீட்சியாக மீண்டும் ஒரு கொடூர தாக்குதல் லுக்மான் மீது நடத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M

அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

AMARA

கனமழையால் அரங்கேறிய கோர விபத்து… கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்தது என்ன??

THAVAMANI NATARAJAN

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN