Newskadai.com
லைஃப் ஸ்டைல்

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

Share this:

கேரளா கோட்டக்கல்லில் வசித்து வரும் மாணவன் ஜெயசூர்யா. அவரது குடும்பம் விழுப்புரத்தைப் பூர்வீகமாக கொண்டது. குடும்ப பிரச்சனை காரணமாக 16 வருடங்களுக்கு முன் ஜெயசூர்யாவின் பெற்றோர்கள் கேரளாவிற்கு வந்து கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தவர்கள். இது குறித்து ஜெயசூர்யா கூறும்பொழுது, “குடும்ப பிரச்சனையால எங்க அப்பா அம்மா கேரளாவுக்கு வந்து 16 வருஷம் ஆச்சு, வந்து ரெண்டு வருஷத்துல ஒரு விபத்துல அப்பாவுக்கு கை கால் வேலை செய்யாம போச்சு. அந்த விபத்துல அப்பா உயிர் பிழைச்சதே ரொம்ப பெருசு, அதனால குடும்பத்துக்கு வந்த வருமானம் நின்னு போய் சாப்பாட்டுக்கே கஷ்டம்.. பிறகு அம்மா தான் மொழி தெரியாத ஊர்ல எங்கள காப்பாத்த வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க…

இப்படி மொழி தெரியாத ஊர்ல ஏன் கஷ்சப்படுறீங்க, சொந்த ஊருக்கு போயிருங்கனு நிறைய பேர் சொன்னாங்க. வாழ்க்கையில் ஜெயிச்சுட்டுதான் ஊருக்கு போகணும்னு வைராக்கியமா இங்கேயே இருந்துட்டாங்க அம்மா. தினம் காலையில அஞ்சு மணிக்கு அம்மா வீட்டு வேலைக்கு போறவங்க ராத்திரி 8 மணிக்கு தான் திரும்பி வருவாங்க. ரொம்ப களைச்சி போயி வருவாங்க. அப்போ எங்க அம்மாவ பாக்கும் போது எனக்கு அழுகையா வரும்,  இனிமே நான் வேலைக்கு போயி உன்ன பாத்துக்கிறேன். நீ வீட்டுல இருமான்னு சொல்லுவேன். அம்மா அப்டியே அழுதுருவாங்க, படிப்பு மட்டும் தான் நம்ம வாழ்க்கைய மாத்தும், நீ ஸ்கூல் போயி நல்லா படின்னு சொல்லுவாங்க.” என்று கண்கள் கலங்க கூறுகிறார்.

“அம்மாவோட வைராக்கியத்த நெறவேத்த நான் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். அதுக்கு அம்மா இன்னும்  அதிகமா உழைக்க வேண்டியதா போச்சு, அப்புறம் ஆறாவது படிக்கும் போது ஸ்கூல் முடிஞ்சு நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். பெரும்பாலும் கேரளாவுல தமிழ் நாட்டுகாரங்கள ரொம்ப கேலி, கிண்டல் செய்வாங்க. நானும் தமிழன்ங்கறதால என்ன விளையாட்டுக்கு கூட சேர்த்துக்க மாட்டாங்க.. எனக்கு அழுகையா வரும்.. அப்பயெல்லாம் அம்மா ‘நீ நல்லாபடி, எல்லாரும் உன்ன விளையாட்டுக்கு சேர்த்துப்பாங்க’னு சொல்லுவாங்க,.. வீட்டுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், என்னோட படிப்புல கவனம் வச்சேன்..

‘ப்ளஸ் டூ வந்துட்ட, இந்த ஒரு வருஷமாவது வேலைக்கு போகாம படி’னு அம்மா சொன்னாங்க. மனசு கேட்கல. தொடர்ந்து வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன். வேலைக்கு போறதுனால காலையில ரெண்டு மணிநேரம் மட்டும்தான் படிக்க முடியும். நோட் வேணும், புக் வேணும்னு அம்மாவை கஷ்டப்படுத்தினதும் கிடையாது. ஸ்கூல் பேக் கூட புதுசா வாங்கிக்கிட்டது கிடையாது. அதுக்கு ஆசைப்பட்டதும் கிடையாது, நோட்ஸ் தேவைப்பட்டா, ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வாங்கி நைட்ல படிச்சுட்டு திருப்பி கொடுத்துருவேன்” என்கிறார் ஜெயசூர்யா.

அரசு பள்ளியில் படித்து எல்லா பாடங்களிலும் “A” கிரேடு எடுத்திருக்கும் ஜெயசூர்யா, தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதை லட்சத்தியமாகக் கொண்டுள்ளார். நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், கல்லூரியில் சேர முடியாத குடும்ப சூழலில் இருக்கும் அவருக்கு பலரும் உதவ முன்வந்திருக்கிறார்கள். தனக்கு நிச்சயம் உதவிகள் கிடைக்குமென்றும், தன்னுடைய லட்சியம் நிறைவேறும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார் எதிர்கால ஐ.ஏ.எஸ் ஜெயசூர்யா.

அவருடைய லட்சியக் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்…


Share this:

Related posts

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI