Newskadai.com
இந்தியா

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி

Share this:

கோபம் வந்துவிட்டால் சிலர் தங்களை தாங்களே காயப் படுத்திக் கொள்வார்கள். ஆனால் நாட்டில் நிலவும் லஞ்சம், ஊழல் அரசின் பொறுப்பின்மை, காற்று, நீர் மாசுபாடு, வன அழிப்பு, சுயநலமாய் வாழும் மனிதர்கள் ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள இயலாமல் தன் கோபம், ஆதங்கம், இயலாமை, வெறுப்பு அனைத்தையும் 18 பக்க காகிதத்தில் பிரதமர் மோடிக்கு எழுதி வைத்துவிட்டு தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டு போய் இருக்கிறாள் ஒரு பள்ளி மாணவி. நாம் அனைவரும் சுதந்திரதினத்தை கொண்டாடிய வேலையில் இச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

அக்கடிதத்தில் ஹோலி பண்டிகையின் போது கெமிக்கல் கலந்த கலர் பவுடர் பூசுவது தடை செய்ய வேண்டும் என்றும், பட்டாசுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அழிந்துவரும் காடுகள் பற்றிய தனது கவலைகளையும், பிரதமர் மோடி காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.லஞ்சம், ஊழல், காற்று- நீர் மாசுபாடு என்று பல விஷயங்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியாக அந்த கடிதத்தில் “பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் பிள்ளைகள் வாழும் நாட்டில் நான் வாழ விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தைப் படித்த காவல்துறையினரின் கண்கள் கலங்கிவிட்டன. மாணவியின் கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Share this:

Related posts

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

AFRIN

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி…

MANIMARAN M