தமிழகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது. மாற்று கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், ரவுடிகள், முன்னாள் காவல் அதிகாரி என அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் சேர்த்து வருகிறது. சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் கட்சியில் அதீத அக்கறை செலுத்தி, அதிவேக வளர்ச்சி காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதகதியில் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொரோனோ கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் முருகன் உட்பட 250 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.