Newskadai.com
தமிழ்நாடு

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

Share this:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பாக்கு தோட்டத்தில் வேலைப் பார்த்துவரும் அசாம் மாநிலம் தம்பதியரின் 9 மாத குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்தது. அசாம் மாநிலம் ரூபாலி மாவட்டத்தை சேர்ந்தவர் அபுல் உசேன், தசீனா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஒரு வயதில் குழந்தையும் 9 மாதம் நிறைந்த ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நிகழும் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த அபுல் உசேன் மனைவியுடன் இரவு வெகு நேரம் தகராறில் ஈடுபட்டுள்ளார். காலையில் வழக்கம் போல் அபுல் உசேன் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். தசீனா தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுந்த 9 மாத குழந்தை வீட்டினுள் சுற்றி சுற்றி வந்துள்ளது. பின்னர் வாசல் படிக்கட்டருகில் தவழ்ந்து வந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்துள்ளது.

தூங்கி எழுந்த தசீனா குழந்தை அருகில் இல்லாதைக் கண்டு வீடு முழுதும் தேடிப் பார்த்திருக்கிறார். வீட்டிற்குள் குழந்தை இல்லாததின் காரணமாக வெளியில் வந்து தேடிய தசீனா குழந்தை வாளிக்குள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நிலையில் குழந்தையைக் கண்ட தசீனா இட்ட கூக்குரலில் அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர். அவர்கள் உதவி புரிய குழந்தையை தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க : http://இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். சம்பவமறிந்து வந்த கணவன் அபுல் உசேன் மற்றும் தசீனா உயிரிழந்த 9 மாத குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share this:

Related posts

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!

AMARA