Newskadai.com
இந்தியா வீடியோ

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

Share this:

இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் மும்பை, பிவாண்டி பகுதியில் இருந்த படேல் காம்பவுண்ட் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த மூன்று மாடி குடியிருப்பில் பல குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் குடியிருப்பில் வசித்த அனைவருமே கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20 பேரை காப்பாற்றியுள்ளனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை எட்டு நபர்கள் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் இருபது முப்பது நபர்கள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரால் ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அனைவரையும் மீட்பதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்தற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this:

Related posts

மத்திய அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

MANIMARAN M

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றது Paytm…

MANIMARAN M

காமெடி மன்னன் ‘வடிவேல்’ பாலாஜி இறுதி நிமிடங்கள்… கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி, மகள்… இதயத்தை சுக்கு நூறாய் உடைக்கும் வீடியோ…!!

NEWSKADAI

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த சுற்றுச்சுவர்… உடல் நசுங்கி பலியான பெண்… , ‘பகீர்’ சிசிடிவி காட்சிகள்…!!

NEWSKADAI

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M