Newskadai.com
இந்தியா

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

Share this:

இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய பிரதமர் பின்பு செங்கோட்டைக்கு வந்தார். பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார். அதன் பின்பு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஏழாவது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.

முதலில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார். பின்னர் கொரோனா காலத்தில் முன் களத்தில் நின்று பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவையை நினைவுகூர்ந்தார். காலை 7:34-க்கு சுதந்திர தின உரையை தொடங்கிய பிரதமர் 9:01 நிறைவு செய்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிரதமர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்.

 • இதுவரை மேக் இன் இந்தியா திட்டத்தில் இருந்த நாம் இனி மேட் ஃபார் வேர்ல்ட் என்ற அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
 • டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நாடு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவரை 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
 • இந்திய மண்ணை ஆக்கிரமிப்பு செய்ய நினைத்தவர்களுக்கு தக்க பதிலடியை இந்திய வீரர்கள் கொடுத்து வருகிறார்கள்.
 • சர்வதேச அளவில் இந்திய மாணவர்கள் போட்டி போடும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்திய விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது, இதனால் நமது நாடு மட்டுமன்றி நட்பு நாடுகளும் பலன் அடையும்.

 

 • தொகுதிகள் மறுவரை பணிகள் முடிந்தவுடன் காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்.
 • ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் ஆறு லட்சம் கிராமங்கள் இணைக்கப்பட்டு தொலைதொடர்பு வசதி பெற்றுள்ளன.
 • வேளாண்துறையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டு உள்ளது.
 • நாடு முழுவதிலும் ஏழு கோடி ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
 • நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 • நாடு முழுவதும் அவரவர் வீட்டிலேயே சுத்தமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • அனைத்து இந்தியர்களுக்கும் பிரத்தியேக எண் கொண்ட சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். அவசர காலத்தில் அனைத்து மருத்துவ விவரங்களையும் மருத்துவர்கள் அறிந்துகொள்ள இது உதவும்.
 • நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்ற 25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • கொரோனோ வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெரிய அளவில் தயாரித்து அனைவருக்கும் வழங்குவோம். மூன்று தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
 • நேரடி அன்னிய முதலீட்டில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும்கூட இந்தியாவிற்கு அதிக முதலீடுகள் வந்துள்ளன.
 • இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தற்சார்பு இந்தியா என்ற எண்ணம் 130 கோடி இந்தியர்களின் மனதில் உருவாகிவிட்டது. இந்தக் கனவை நனவாக்க தேவையான திறமை நம்பிக்கை செயல்திறன் அனைத்தும் நம்மிடம் இருக்கிறது.
 • அதிகமான இளையோர்களின் சக்தி கொண்ட நாடு உலகிலேயே இந்தியாதான். இந்த உலகம் நம்மை உற்று நோக்குகிறது உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தவேண்டும். நாம் உலகை வழிநடத்த கூடியவர்களாக உயர வேண்டும்.
 • நாம் அனைவரும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும்.
 • நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாமே தயாரிக்க வேண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் தயாராக வேண்டும்.
 • தற்சார்பு இந்தியாவில் முக்கியமானது விவசாயிகளையும் வேளாண்மையையும் தற்சார்பு உடையதாக மாற்றுவது.
 • உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது தனது ஆன்ம பலத்தால் அந்த எதிர்பார்ப்பை இந்தியா பூர்த்தி செய்யும். பன்முகத் தன்மைதான் இந்தியாவின் பலம் இந்தியாவின் ஒற்றுமை உலகத்துக்கே பாடம்.

இவ்வாறாக பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.


Share this:

Related posts

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M