Newskadai.com
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

Theft
Share this:

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் சேடபட்டியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள சாந்தி என்பவரின் வீட்டில் இரவு தங்கிய ராஜம்மாள், தனது பையில் தனது குடும்பத்தினரின் 73.5 சவரன் நகைகள், ரூ.95 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பத்திரமாக வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

Dindugal

மறுநாள் காலையில் கண் விழித்த குடும்பத்தினரை நகை, பணம் வைத்திருந்த பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து செம்பட்டி காவல் நிலையத்தில் ராஜம்மாள் புகார் கொடுத்தார். புகாரைத் தொடர்ந்து. ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், அறிவுறுத்தலின்படி செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

Theft

அதில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரன் (70), அவருடைய மகன் பாண்டி ஆகியோர் தான் சாந்தி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 30,45,800/- ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்தனர், மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this:

Related posts

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி…

MANIMARAN M