Newskadai.com
தமிழ்நாடு

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட போலி மதுபாட்டில்கள்… மடக்கிப் பிடித்த போலீசார்..!!

Share this:

தமிழகத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள் போன்ற போதை பொருட்களை கடத்திய வழக்கில் சிக்குபவர்கள் ஏராளம். அந்த வகையில் பாலக்கோடு அருகே கர்நாடக மாநிலத்திலிருந்து பாப்பாரப்பட்டிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதாக தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வாகன சோதைனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படியான கார் ஒன்று வந்ததை நிறுத்திய போது கார் நிர்காமல் வேகமாக சென்றுள்ளது. காரை மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டபோது காரில் 20 மூட்டைகள் சிக்கியுள்ளது. அதில் 960 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

Alcohol smuggling

இதனை தொடர்ந்து கார் டிரைவரான சிராஜிதின்கான் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். இதில் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த சிராஜிதின்கான் ஆனேக்கல் பகுதியில் போலியாக மதுபாட்டில்களை தயாரித்து அதில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபாட்டில்கள் போன்று ஸ்டிக்கர் ஒட்டி, அதனை கடத்தியதும், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவருக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலனா மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Share this:

Related posts

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

குணமானாலும் 90 நாட்களுக்கு பிறகு, மீண்டும் குறிவைக்கும் கொரோனா… பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

NEWSKADAI

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN

பூஜை பொருட்கள் வாங்க சென்றவரின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!

MANIMARAN M

மக்களே உஷார்: ஆன்லைன் ‘டெலிவரி பாய்’ உருவில் இப்படியும் ஆபத்து இருக்காம்… ‘எச்சரிக்கும்’ காவல்துறை…!

THAVAMANI NATARAJAN